2025 ஜூலை 02, புதன்கிழமை

தடையை துடைத்தெறிந்த நாடகம்

Kanagaraj   / 2014 ஜூன் 26 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், ற.றஜீவன்


யாழ். பல்கலைக்கழக கலைப்பீட நாடகமும் அரங்கியலும் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நாடகம், பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் தடையையும் மீறி நேற்று வியாழக்கிழமை (26) ஆற்றுகைசெய்யப்பட்டது.

குறித்த நாடகம் பல்கலைக்கழக நிர்வாகத்தை அவமானப்படுத்துவதாகவும், இதனை ஆற்றுகை செய்தால் விளைவுகளைச் எதிர்நோக்க வேண்டிய ஏற்படும் என்று நிர்வாகம் கடிதம் மூலம் மாணவர்களை எச்சரிக்கை செய்திருந்தபோதும், மாணவர்கள் அந்த நாடகத்தை ஆற்றுகை செய்துள்ளனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களால், மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்ற வேண்டத்தகாத சம்பவங்களைக் கதையை கருவாகக் கொண்டு, இந்த நாடகம் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் அதனை நேற்றைய தினம் ஆற்றுகை செய்ய ணிடிவெடுக்கப்பட்டதாகவும் நாடகணிம் அரங்கியலும் மாணவர்கள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் காலை 11 மணியளவில் ஆற்றுகைக்கு மாணவர்கள் தயாராகியிருந்தனர்.

இருந்தும், இன்று (நேற்று) காலை 10 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குறித்த ஆற்றுகையைச் செய்யவிருந்த மாணவர்களுக்கு அச்சுறுத்தல் கடிதம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. குறித்த ஆற்றுகையை செய்யவேண்டாமென்றும் மீறி ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்களால் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆற்றுகையை நிறுத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி ஆலோசனை பெறுவதற்காக, நேற்று பகல் 10.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தiஷவியைச் சந்திப்பதற்கு மாணவர்கள் சென்றபோது அவர் தனக்கு நேரமில்லைஎன்ற காரணத்தைக் கூறி மாணவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார்.
இந்நிiஷயில், குறித்த ஆற்றுகையின் எழுத்துருவைக் கொண்டுவந்து காட்டுமாறு பல்கiஷக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் கோரியிருக்கின்றது.

இந்நிiஷயில் குறித்த நாடகத்தினை ஆற்றுகை செய்யவிருந்த மாணவர்கள், மாணவர் ஒன்றியம், ஊழியர் சங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த நாடகத்தை ஆற்றுகை செய்துள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .