2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.விரைவு தபால் சேவையில் துரித வளர்ச்சி

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விரைவு தபால் சேவை வடமாகாணத்தில் துரித வளர்ச்சி கண்டுள்ளதாக வடமாகாண அஞ்சல் மா அதிபர் என்.இரத்தினசிங்கம்  வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

மேற்படி துரித தபால் சேவையினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் இரண்டு வாகனங்கள் சேவையில் உள்ளதுடன், அவை பருத்தித்துறைப் பகுதியில் இருந்து யாழ்.நகரம் முழுவதும் துரிதமாக தபால்களைச் சேகரித்து 24 மணிநேரத்திற்குள் ஒப்படைக்கப்படவேண்டிய இடத்தில் ஒப்படைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டர்.

20 கிராம் கொண்ட தபால் பொதியொன்றிற்கு 65 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதாகவும் இந்த சேவையினை வடமாகாண மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .