2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் தீவிபத்து: இரண்டு வீடுகள் சேதம்

Kogilavani   / 2014 ஜூன் 27 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
யாழ். குருநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற தீவிபத்தில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

மற்றொரு வீடு பகுதியாக எரிந்து சேதமடைந்துள்ளது.  குருநகர் பாங்ஷால் வீதியில் குடிமனைகள் நெருக்கமாக உள்ள பகுதியிலே இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

இத் தீ விபத்தில் இரு வீடுகள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன. அருகில் இருந்து மற்றொரு வீட்டுக்கும் தீ பரவி அது பகுதியாக எரிந்த நிலையில் அணைக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரும் படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. (மலரும்.கொம்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .