2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ்.வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிப்பர் ரக வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி இன்று சனிக்கிழமை (28) காலை தங்களிடம் ஒப்படைத்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர்,  மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் ரக வாகனத்தினை தடுத்து சோதனையிட முற்பட்ட போது வாகனங்களை குறித்த இடத்திலேயே கைவிட்டுவிட்டு சாரதிகள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .