2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆலயத்திற்கு நிதி சேகரித்த மூவர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அருள்மிகு ஞானவைரவர் ஆலயத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கு நிதி சேகரிப்பதாகக்கூறி போலி பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்த மூவர் அரியாலைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மூவரும் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிட்ம் கேட்டபொழுது அவ்வாறான பற்றுச்சீட்டுக்களை எதனையும் தாங்கள் விற்பனை செய்யவில்லையென தெரிவித்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மூவரும் அரியாலைப் பகுதியிலுள்ள வீடுகளிற்கு முன்னால் இன்று (28) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதினையடுத்து அவர்களைக் கைது செய்த யாழ். பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர், குறித்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட போது, அவர்கள் போலி பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்து வந்தமை தெரியவந்ததாகப் பொலிஸார் கூறினர்.

சும்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .