2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கழிவகற்றல் வண்டி

Kanagaraj   / 2014 ஜூன் 28 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.குகன்


வலி. வடக்குப் (தெல்லிப்பழை) பிரதேச சபையினால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பாவனைக்கென கழிவகற்றல் வண்டியொன்று இன்று (28) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு கழிவகற்றல் வண்டியொன்று வேண்டும் என தெல்லிப்பழை வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி ம.உமாசங்கர் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த கழிவகற்றல் வண்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கழிவகற்றல் வண்டியினை வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், தெல்லிப்பளை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.இரவீந்திரன் ஆகியோர் வழங்க, தெல்லிப்பழை வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி ம.உமாசங்கர் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளருமாகிய லயன் சி.ஹரிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .