2025 ஜூலை 02, புதன்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Kogilavani   / 2014 ஜூன் 29 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி. தெற்கு, உடுவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முத்துலிங்கம் நவலோகராஜா (வயது 45) மீது ஞாயிற்றுக்கிழமை (29) பிரதேச சபைக்கான வாகன சாரதி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
உடுவில் பிரதேச சபைக்கான பஸ் நிலையத்தில் வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சாரதியால் மேற்கொள்ளப்பட்ட முறைக்கேட்டு சம்பவமொன்றினை பிரதேச சபையின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்ததினையடுத்தே தன்னை தாக்கியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .