2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழில் இறால் விலை அதிகரிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்தின் கடல்கள் மற்றும் கடல்நீர் ஏரிகளில் இறால்கள் பிடிக்கப்படுவது குறைவாகக் காணப்படுவதால் இறால்களின் விலைகள் 200 ரூபாவால் அதிகரித்துக் காணப்படுவதாக மீன் ஏலம் கூறுபவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களுக்கு இறால் படுகை வெகுவாகக் குறைந்து காணப்படுவதினால் காக்கைதீவு, பண்ணை, சின்னக்கடை, நாவாந்துறை உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இறால் வரத்துக்கள் குறைந்து காணப்படுகின்றன.

இதனால், முன்னர் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த சிவப்பு இறால் தற்போது 700 ரூபாவாகவும், முன்னர் 800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த கறுப்பு இறால் 1000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனைவிட குறுனி இறால் கூட கிலோ 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இனிவரும் மாதங்களில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் இறால் நண்டு மற்றும் கணவாய் போன்றவற்றை அதிகமாக நாடுவதினால் இறாலின் விலைகள் இன்னமும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

அதேவேளை, ஒரு கிலோ கணவாய் 500 தொடக்கம் 600 ரூபா வரையிலும், ஒரு கிலோ நண்டு 400 விலிருந்து 450 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .