2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பனை மரம் முறிந்து வீழ்ந்து வீடு சேதம்

Super User   / 2014 ஜூன் 29 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


ஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் பனை மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லையென கிராம சேவை அதிகாரி குறிப்பிட்டார்.

பக்கத்து வளவில் சாய்ந்த நிலையில் நின்றிருந்த மேற்படி பனை மரத்தினால் தங்கள் வீட்டிற்குப் பாதிப்புள்ளதாக சேதமடைந்த வீட்டின் உரிமைளாளர் ஏற்கனவே தனக்குத் தெரிவித்திருந்ததினையடுத்து, குறித்த பனை மரத்தினைத் தறிக்கும்படி பக்கத்து வளவு உரிமையாளரிடம் எட்டு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக கிராம அலுவலர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வளவு உரிமையாளர் குறித்த பனை மரத்தினைத் தறிக்காத நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .