2025 ஜூலை 02, புதன்கிழமை

அத்தியடிப் பிள்ளையார் கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை அத்தியடிப் பிள்ளையார் கோவிலின்  கூரையை பிரித்துத்துக்கொண்டு  உள்நுழைந்தவர்கள், களஞ்சியசாலையிலிருந்த 100,000 ரூபா பெறுமதியான ஒலிபெருக்கிச்  சாதனங்களை சனிக்கிழமை (28) இரவு திருடிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (29) காலை பூஜைகளை மேற்கொள்வதற்காக கோவிலுக்கு வந்த கோவில் குருக்கள், ஒலிபெருக்கிச் சாதனங்கள் திருடப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.

இத்திருட்டு தொடர்பில்  பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு  செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .