2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்விசார் நிகழ்வுகளுக்கு மண்டபம் இலவசம்

Kanagaraj   / 2014 ஜூன் 30 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விசார் நிகழ்வுகளை நடத்துவதற்கு வலி.தென்மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தை இலவசமாக வழங்குவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ச.சிவகுமார் இன்று திங்கட்கிழமை (30) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச சபைகளில் வசதிகளுடன் கூடிய கலாச்சார மண்டபம் எமது பிரதேச சபையின் கீழுள்ளது. இந்த மண்டபம் தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மேற்படி மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டங்கள், மற்றும் வலி.தென்மேற்கு இளைஞர் கழகத்தினரின் கல்விக் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல கல்விசார் நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

அவ்வாறான கல்விசார் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், கல்வி நடவடிக்கைகளுக்கு பிரதேச சபை பங்களிப்பு வழங்கவேண்டும் எனக்கருதியும் இனிவருங்காலங்களில் கல்விசார் நடவடிக்கைகளுக்கு மண்டப வாடகை அறவிடுவதில்லையெனத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருந்தும், மண்டபத்திற்கான மின்சாரம் மற்றும் பராமரிப்பாளரின் கூலியாக 500 ரூபா மட்டும் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .