2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கசிப்புடன் கைதானவர் சமூக சேவையில்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஏழாலை பகுதியில் 20 லீற்றர் கசிப்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட 40 வயதான  ஒருவரை  நீதிமன்ற உத்தரவுக்கமைய,  200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் திங்கட்கிழமையிலிருந்து (30) ஈடுபடுத்தி வருவதாக  சுன்னாகம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (27) ஆஜர்படுத்தியபோது,  மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா 25 நாட்களில் 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் இவர்; ஈடுபடவேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தார்.

கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் மற்றும் வைத்திருப்பவர்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுவதற்கு  யாழ்ப்பாண நீதிமன்றங்கள் அண்மைக்காலமாக உத்தரவிட்டு வருகின்றன.

அண்மையில் யாழ். சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவரை  180 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .