2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு இன்று விடுமுறை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் எரித்துக் கலைக்கப்பட்ட குளவிகள் பாடசாலை வளாகத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளதால்,  அப்பாடசாலைக்கு செவ்வாய்க்கிழமை  (01) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  பாடசாலை அதிபர் சியாமளா கந்தசாமி தெரிவித்தார்.

இப்பாடசாலையிலிருந்த கருங்குளவிக் கூடொன்று  திங்கட்கிழமை (30) தீயிட்டு எரிக்கப்பட்டதுடன்,  குளவிகளும்; கலைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் வந்த  குளவிகளை கலைக்கும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வழமை போன்று  நாளை புதன்கிழமையிலிருந்து  (02)  பாடசாலை நடைபெறுமெனவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (30) குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .