2025 ஜூலை 02, புதன்கிழமை

தொழில்நுட்ப பீடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா

Kanagaraj   / 2014 ஜூலை 01 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


மஹிந்தோயத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் தொழில்நுட்ப பீடங்கள் அமைக்கும் நடவடிக்கையில், முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் மகா வித்தியாலயம் மற்றும் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் அடிக்கற்கள் நேற்று திங்கட்கிழமை (30) நாட்டப்பட்டன. 

இதற்கான அடிக்கற்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாட்டி வைத்தார். இலங்கை முழுவதிலும் 250 பாடசாலைகள் தொழில்நுட்பப் பீடங்கள் அமைப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குடிசார் பொறியியல் தொழில்நுட்ப கூடம், இயந்திரப் பொறியியல் கூடம், மின்சக்தி மற்றும் இலத்திரனியல் கூடம், உயிரியியல் முறைமை தொழில்நுட்ப கூடம், அவற்றுடன் தொடர்புடைய வகுப்பறைகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கியதாக இந்த தொழில்நுட்பப் பீடங்கள் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .