2025 ஜூலை 02, புதன்கிழமை

மோட்டார் ஷெல்கள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூலை 01 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். மணற்காடு மணல் அள்ளும் பகுதியிலிருந்து 82 மில்லிமீற்றர் மோட்டார் ஷெல்கள் 12, அதற்குரிய வெடிப்பி (ஸ்ரார்ட்டர்) 12 என்பன இன்று (01) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த nஷல்களை இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மகேஸ்வரி நிதியத்தால் மணல் அள்ளும் மேற்படி இடத்தில் மோட்டார் nஷல்கள் இருப்பதாக பொதுமக்கள் விசேட அதிரடிப் படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .