2025 ஜூலை 02, புதன்கிழமை

போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 01 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

யாழ். திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த, தாவடியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று(01) கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடமிருந்து 4 கிராம் கஞ்சா மற்றும் 120 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .