2025 ஜூலை 05, சனிக்கிழமை

டைனமைட் வெடி வைத்த மீன்கள்; நால்வருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

டைனமைட் வெடி வைத்து மீன்பிடித்த மற்றும் அந்த மீன்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த மே மாதம் 5ஆம் திகதி யாழ். குருநகர்ப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட  04 பேருக்கு தலா 50,000 ரூபா படி  தண்டமாக  யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (02) விதித்தார்.

டைனமைட் வெடி வைத்து மீன்பிடித்த குருநகரைச் சேர்ந்த  02 மீனவர்களுக்கும் இந்த  மீன்களை கொள்வனவு செய்த கொட்டடியைச் சேர்ந்த  இருவருக்குமே  தண்டம் விதிக்கப்பட்டது.

கடற்படை புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 04 பேரும் யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், இவர்களிடமிருந்து 1,200 கிலோகிராம் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த 04 பேரையும் மே மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 02 மீனவர்களை தலா 200,000  ரூபா  பெறுமதியான சரீரப்பிணையிலும் கொள்வனவு செய்த இருவரையும் தலா 100,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் செல்ல அனுமதியளித்திருந்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் சிலதை பகுப்பாய்வுக்காக நாரா நிறுவனத்துக்கு அனுப்பிவைக்குமாறும் மீதி மீன்களை அழிக்குமாறும்  நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பகுப்பாய்வின் மூலம்  டைனமைட்; வெடி வைத்து பிடிக்கப்பட்ட மீன்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த  பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் இன்றையதினம்  கடற்றொழில் நீரியல்வளத்துறையினர் சமர்ப்பித்தபோதே இவர்களுக்கு நீதவான் தண்டம் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .