2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் வல்வெட்டித்துறையில் கைது

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வாகரை நீதிமன்றத்தினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை, வல்வெட்டித்துறையில் வைத்து வியாழக்கிழமை (3) கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) தெரிவித்தனர்.

நடராசா ரவிச்சந்திரன் (27) என்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறைப் பகுதியில் புதிதாக ஒரு நபர் நடமாடித் திரிவதாக தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி நபரைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு, குடிபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விவகாரத்து வழக்கு ஆகிய குற்றங்களுக்காக இந்நபருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவரை வாகரைப் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .