2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயம்

A.P.Mathan   / 2014 ஜூலை 05 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். கரவெட்டி புறாப்பொறுக்கி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று சனிக்கிழமை (05) இரவு நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
சுழிபுரம் பகுதியினைச் சேர்ந்த தங்கராசா றேக்குமார் (26), கொற்றாவத்தையினைச் சேர்ந்த பொன்னையா கங்காதரன் (44), கரவெட்டியினைச் சேர்ந்த கந்தசாமி ரவீந்திரன் (20), அல்வாய் மேற்கினைச் சேர்ந்த தேவராசா லோறன்ஸ் றெஜிகரன் (33) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
 
இவர்களில் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும், மற்றைய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .