2025 ஜூலை 05, சனிக்கிழமை

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் பற்றைக்காடுகள் துப்பரவு

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்


யாழ்.முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகளைத் துப்பரவு செய்து அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (6) தெரிவித்தனர்.

அப்பகுதியில் மிதிவெடிகள் அதிகம் இருப்பதினால் மிதிவெடி அகற்றும் பணியாளர்களின் மூலம் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பற்றைகளை துப்பரவு செய்யும் பணி சனிக்கிழமை (5) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திங்கட்கிழமை (07) அகழும் பணி மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மேற்படி பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் கடந்த புதன்கிழமை (02) பணியினை மேற்கொள்ளும்போது, எலும்புக்கூடு ஒன்றினைக் கண்ணுற்று பளைப் பொலிஸாரிற்கு அறிவித்தனர்.

தொடர்ந்து பளைப் பொலிஸாரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் 3 எலும்புக்கூடுகளும் 2 எலும்புத் துண்டு எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், வெடிபொருட்களும்  இதர பொருட்களும் மீட்கப்பட்டன.

மேலும், அவ்விடத்தில் மீட்கப்பட்ட ஆடைகளைக் கொண்டு, அந்த எலும்புக்கூடுகள் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து, அப்பகுதியில் அகழ்வு மேற்கொள்வதற்கு பற்றைக்காடுகள் தடையாகவிருந்தமையினால் அவற்றினை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .