2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற எண்மர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெற்ற பெண்ணொருவர் உட்பட 8 பேரை சனிக்கிழமை (5) மாலை கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (6) தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகளும் சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

புன்னாலைக்கட்டுவன், ஏழாலை ஆகிய இடங்களைச் சேர்ந்த தலா 3 பேரும் குப்பிளானைச் சேர்ந்த 2 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குதல் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .