2025 ஜூலை 05, சனிக்கிழமை

அனுமதியின்றித் திறக்கப்பட்ட உணவகம் மூடப்பட்டது

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.அரசரட்ணம்

யாழ்.மானிப்பாய் சந்தைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (04) அனுமதியின்றித் திறக்கப்பட்ட உணவகம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரின் உதவியுடன் ஒரு மணித்தியாலயத்தில் மூடப்பட்டதாக வலி.தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (6) தெரிவித்தார்.

மேற்படி உணவகம் பிரதேச சபையின் அனுமதி பெறாமல் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான முறையில் கடந்த வெள்ளிக்கிழமை (04) காலை திறக்கப்பட்டது.

இதனை அறிந்து அவ்விடத்திற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகருடன் சென்று குறித்த உணவகத்தினை மூடுமாறு உணவக உரிமையாளருக்குக் கூறியபோது, அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் என்னால் முறைப்பாட்டினைப் பதிவு செய்ததின் அடிப்படையில் பொலிஸார் உணவகத்தினை மூடச் செய்தனர் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .