2025 ஜூலை 05, சனிக்கிழமை

கடந்த காலங்களை போல பணம் வழங்க முடியாது: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


'கடந்த காலங்களைப் போன்று என்னிடம் வந்து யார் அழுதாலும், பணம் வழங்கும் நிலையில் தற்போது நான் இல்லை. உதவி கேட்டு வந்தால் அது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே  எதையும்; செய்யும் நிலையில் நான் இருக்கிறேன்'

இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட பாரவூர்திச் சங்கத்தினருக்கும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு கோண்டாவிலில்  உள்ள  பாரவூர்திச் சங்க அலுவலகத்தில்  அச்சங்கத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்டத்தின் தேவைகளுக்காக வெளிமாவட்டங்களிலிருந்து மணல் கொண்டுவருவதை  நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த நடவடிக்கை இன்னும் ஒரு வார காலத்தினுள் நிறைவேறும்.

யாழ். மாவட்டத்துக்கான மணல் தேவையை  பூர்த்தி செய்யும் தேவை ஏற்படும் நிலையில், பாரவூர்திச் சங்கத்திலுள்ள பாரவூர்திகளுக்கும் குறிப்பிட்டளவில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

தற்போது யாழ். மாவட்டத்தில் கப்பலிலிருந்து சீமெந்து இறக்குமதி செய்யும் செயற்பாடு  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருகோணமலையிலிருந்து சீமெந்து எடுத்துவரும் நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பமாகலாம். இதன்போது, ஓரளவுக்கு பாரவூர்திகளுக்கு தொழில்  வழங்கக்கூடியதாக இருக்கும்.

மேலும், ஆனையிறவு உப்பளத்தின் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்து உப்பு ஏற்றி இறக்கும் பணிகள் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் ஆரம்பமாகலாம். இதன்போதும்  பாரவூர்திகளுக்கு தொழில் வழங்க முடியும்.

எதற்கும் என்னை நீங்கள் முதலில் பலப்படுத்த வேண்;டும். கடந்த காலங்களில் வேறு வேறு இடங்களுக்குச் சென்றதை விடுத்து, என்னுடன் அணுகியிருந்தால் உங்களுடைய பிரச்சினையில் ஒரளவையாவது தற்போது நிறைவு செய்திருக்கலாம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .