2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொலைக்கு பயன்படுத்திய வாள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவில் சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து, பயன்படுத்தப்பட்ட வாளை கொடிகாமம் பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து  ஞாயிற்றுக்கிழமை (06) மாலை கைப்பற்றியதாக   சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (07) தெரிவித்தனர்.

மேலும்,  மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தின்போது அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (வயது 26) என்பவர் மரணமடைந்ததுடன்,  படுகாயமடைந்த 08 பேர்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும்  யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மீசாலையைச் சேர்ந்த மூவர்   ஞாயிற்றுக்கிழமை (06) காலை கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையைத் தொடர்ந்து,  மேற்படி வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டன.

மீசாலையில் கோவில் திருவிழா ஒன்றின்போது, சனிக்கிழமை (05) மாலை இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட  கைகலப்பைத் தொடர்ந்து  இந்த வாள்வெட்டுச்; இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .