2025 ஜூலை 05, சனிக்கிழமை

சாகசப் பூங்காவை பொறுப்புணர்வுடன் பராமரிக்க வேண்டும்: யோகேஸ்வரி

Kogilavani   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


“சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள யாழ்.பழைய பூங்காவின் சாகசப் பூங்காவை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்” என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் சிறார்களுக்காக நவீன வடிவமைப்புக்களுடன் சாகச பூங்கா நிர்மாணிக்கப்படடுள்ளது. இதனை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும் வைபவம்  ஞாயிற்றுக்கிழமை(6) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் இப்பகுதியை எவ்வாறு சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்க முடியும் என்பது குறித்து ஆராய்ந்ததன் பின்பே இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், பத்திரிகைகளில் உண்மைக்குப்புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

இருந்தபோதிலும் இன்று சிறார்களினதும் பெரியோர்களினதும்  ரம்மியமான சூழலாக இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 

எனவே, இதனை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.  இதன்மூலம் ஒவ்வொருவரும் மனதையும் உடலையும் ஸ்திரப்படுத்த முடியும்” என்றார். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .