2025 ஜூலை 05, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததால் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் திங்கட்கிழமை (07) காலை முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த 03 சிறுவர்கள் உட்பட  06 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முச்சக்கரவண்டி கோண்டாவில் பாடசாலை வீதியிலிருந்து யாழ். நகர் நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் அடித்த பந்து ஒன்று முச்சக்கரவண்டிக்கு  முன்பாக  வந்து வீழ்ந்தது. இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி நிலைகுலைந்தமையாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .