2025 ஜூலை 05, சனிக்கிழமை

பணம் திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறையிலுள்ள ஐஸ்கிறீம் விற்பனை நிலையமொன்றிலிருந்து  15,000 ரூபாவை  சனிக்கிழமை (05) இரவு திருடிய குற்றச்சாட்டின் பேரில்  துன்னாலையைச்; சேர்ந்த இருவரை ஞாயிற்றுக்கிழமை (06) கைதுசெய்ததாக பருத்தித்துறை பொலிஸார் திங்கட்கிழமை (07) தெரிவித்தனர்.

கோவில்; நேர்த்திக்காகச் சேமித்து வைக்கப்பட்ட பணத்தையே திருடியதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்  ஐஸ்கிறீம் விற்பனை நிலைய  உரிமையாளர்  ஞாயிற்றுக்கிழமை (07) முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவ்விருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .