2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'சேந்தாங்குளம் தேவாலய புனரமைப்புக்கு நிதியில்லை'

Menaka Mookandi   / 2014 ஜூலை 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆரோக்கியநாதர் தேவாலயத்தினை புனரமைப்பு செய்து மீண்டும் வழிபாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நிதியில்லையென தேவாலய அருட்தந்தை இன்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு சொந்தமாக முன்பள்ளி மற்றும் சேமக்காலை என்பன அமைந்திருந்தன. தொடர்ந்து 1990களில் ஏற்பட்ட இடப்பெயர்வினால் குறித்த தேவாலயம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் தேவாலயமும் சேதமடைந்து காணப்படுகின்றது.

தற்போது, தேவாலயத்தின் வழிபாட்டு நடவடிக்கைகள் ஒரு கொட்டகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்படி தேவாலயத்திற்குச் சொந்தமான காணியினைச் சுவீகரிக்கும் பொருட்டு இன்று திங்கட்கிழமை (07) நிலஅளவைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அவ்விடத்திற்கு வந்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலி.வடக்குத் தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலி.வடக்குப் பிரதேச சபை உபதவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோர் காணி அளவிடும் நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சேதமடைந்துள்ள தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கென அனந்தி சசிதரன், மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஒரு தொகை நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .