2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இறைச்சிக்கு ஆமை வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைப் பகுதியில் கடலாமையொன்றை  இறைச்சிக்கு வெட்டியதாகக் கூறப்படும் 02 பேரை திங்கட்கிழமை (07) கடற்படையினர் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 05 கிலோ கடலாமை இறைச்சியை கைப்பற்றியதாகவும் செவ்வாய்க்கிழமை (08) பொலிஸார் கூறினர்.
அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ரதீஸ்குமார் (வயது 30), திருச்செல்வம் மைக்கல்பெர்ணான்டோ (வயது 34) ஆகியோரே  கைதுசெய்யப்பட்டனர்.

ஆமையை வெட்டிய  பின்னர் அதன் ஓட்டை  பழைய கிணறு ஒன்றினுள் போடுவதற்கு இவர்கள்  சென்றனர். இதை  அவதானித்த கடற்படையினர்  இவர்களை பிடித்து விசாரித்தபோது, இவர்கள் ஆமை வெட்டியமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .