2025 ஜூலை 05, சனிக்கிழமை

வர்த்தகரை தாக்கியமை தொடர்பில் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சம்மாந்துறை, வீரமுனை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கிராம சேவகர் ஒருவர் உட்பட 04 பேரை திங்கட்கிழமை (07)  கைதுசெய்ததாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை வீரமுனை 02 கோவில் வீதியைச் சேர்ந்த சேகுமதி தவமதி என்ற இந்த வர்த்தகர், வீரமுனை பகுதியில் உள்ள ஸ்ரீசிந்தியாத்திரைப் பிள்ளையார் கோவில் திருவிழாவின்போது, வியாபாரத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது,  பின்தொடர்ந்த  04 பேர் இவரை  தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிலையில்,  தலைமறைவாகியிருந்த  04 சந்தேக நபர்களை  கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

தாக்குதலுக்கு உள்ளான வர்த்தகர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .