2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண ஆளுநர் வசதியாக இருக்கின்றார் ரமபோசவிடம் சி.வி

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், பொ.சோபிகா, யோ.வித்தியா

“வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வசதியான நிலையில் இருப்பதினை அவரை நீங்கள் சந்திக்கச் செல்லும் போது அறிவீர்கள்” என சிறில் ரமபோசவிற்குக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க பிரதி  ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களை யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து மேலும் தெரிவித்ததாவது,

“வடமாகாண சபையினராகிய நாங்கள் வசதிகளற்ற நிலையில் இருக்கின்றபடியால் உங்களுடனான சந்திப்பினை விருந்தினர் விடுதியில் நடத்துகின்றோம். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி எவ்வளவு வசதியாக இருக்கின்றார் என்பதை அவரை சந்திக்கச் செல்லும்போது நீங்கள் அறிவீர்கள். இந்நிலையிலே எங்கள் வடமாகாண சபையின் நிர்வாகம் இருக்கின்றது” என எடுத்துக்கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .