2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை தினம்

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 6 ஆவது குருபூசை தினம் துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (08) அனுஷ்டிக்கப்பட்டது.

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தற்போதைய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னையின் ஐங்கோண வடிவ நினைவு மண்டபத்;திலும் வழிபாடுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து, அன்னையின் திருவுருவச் சிலைக்கு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீவ.அகிலேஸ்வரகுருக்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் தி.வேல்நம்பி, துர்க்கா மகளிர் இல்ல பிள்ளைகள் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து மூத்த சிவாச்சாரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பதினொறாம் திருமுறை நூல் வெளியீடும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பொதுமக்கள், மகளிர் இல்ல சிறுமிகள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.     




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .