2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கியவர்களுக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைப் பகுதியில் வைத்து கடலாமையினை இறைச்சியாக்கிய இரண்டு நபர்களுக்கும் தலா 3500 ரூபா தண்டம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் செவ்வாய்க்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 கிலோ ஆமையிறைச்சியினை அழிக்கும் படியும் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேற்படி இரு நபர்களும் திங்கட்கிழமை (7) கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்நபர்கள் ஆமையினை இறைச்சியாக்கிய பின்னர் அதனுடைய ஓட்டினை பழைய கிணறு ஒன்றினுள் போடச் சென்றவேளை, அதனை அவதானித்த கடற்படையினர் குறித்த நபர்களைப் பிடித்து விசாரணை செய்தபோதே அவர்கள் ஆமையினை இறைச்சியாக்கியமை தெரியவந்ததாகப் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து குறித்த நபர்களை செவ்வாய்க்கிழமை (08) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையிலே நீதவான் மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .