2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாணவியை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு செய்த நபர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்
யாழ். ஊர்காவற்றுறைப் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுப் பாடசாலை மாணவியினை தொந்தரவு செய்து வந்த காரைநகர் மருதபுலம் பகுதியினைச் சேர்ந்த 35 வயதுடைய நபரை நேற்று சனிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தனர்.

மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே மேற்படி நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மாணவியின் தந்தையுடைய நண்பரெனவும் கடந்த ஒரு சில மாதங்களாக, மாணவியினை திருமணம் செய்யும் படி  மேற்படி நபர் தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மேற்படி மாணவிக்கு சுகயீனம் ஏற்பட்டமையினையடுத்து, மாணவியின் தந்தை தனது நண்பரான குறித்த நபருடன் மாணவியினை யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.

அழைத்துச் செல்லும் வேளையில் மேற்படி நபர், தன்னைத் திருமணம் செய்யும்படி  தொந்தரவு செய்த வண்ணம் இருந்துள்ளார்.
இதுதொடர்ப்பில் மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .