2025 ஜூலை 05, சனிக்கிழமை

தலையில்லாத ஆடுகளை கொண்டு செல்லத்தடை

Super User   / 2014 ஜூலை 15 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ். நவாலி காத்தவராயர் ஆலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறும் வேள்வியில் வெட்டப்படும் ஆடுகள் தலையில்லாத நிலையில் வெளியில் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக வலி. தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரியினால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைக்கமைய வெட்டப்படும் ஆடுகள் ஆலய வளாகத்திற்குள் வைத்து இறைச்சியாக்கிய பின்னர் சுகாதார வைத்திய அதிகாரியினால் சீல் வைக்கப்பட்ட பின்னரே வெளியில் எடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி ஆலயத்தில், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்கப் பிரதேச சபைச் சட்டத்திற்கமைய கொல்களம் அமைத்து, ஒவ்வொரு ஆடாக வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே ஆடுகள் வெட்டப்படும். அவ்வாறு வெட்டப்படும் ஆடுகளை ஆலய வளாகத்தில் வைத்து உரித்து இறைச்சியாக்கிய பின்னர், கழிவுகளை அங்கு நிற்கும் பிரதேச சபையின் வாகனத்தில் போடவேண்டும் எனவும் அவர் கூறினார்.


இதேவேளை, இந்த நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .