2025 ஜூலை 05, சனிக்கிழமை

மயிலிட்டி முகாமில் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்., பருத்தித்துறை, சுப்பர்மடம் (மயிலிட்டி முகாம்) பகுதியிலிருந்து 40 வயதுடைய ஆணொருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை (16) காலை மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, ஆழியவளை, தாளையடியினைச் சேர்ந்த பாலசிங்கம் சதாசிவம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்தாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், சுப்பர்மடம் பகுதியிலேயே தங்கியுள்ளனர். இதனால், இவ்விடம் மயிலிட்டி முகாம் என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .