2025 ஜூலை 05, சனிக்கிழமை

வீட்டில் திருட முற்பட்ட இருவர் மடக்கி பிடிப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரி பெரிய அரசடிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடுவதற்கு முற்பட்ட   இருவரை பிடித்து பொதுமக்கள் தம்மிடம் 
ஒப்படைத்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தப்பி சென்றுள்ளதாகவும் சாவக்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலிருந்த பெண் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த கும்பல் வீட்டிலிருந்த பொருட்களைத் திருடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

கடையிலிருந்து திரும்பி வந்தபோது தனது வீட்டிலிருந்த பொருட்கள்  திருடப்படுவதினை அவதானித்த பெண் சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து, அங்குகூடிய பொதுமக்கள் திருடர்கள் இருவரைக் மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .