2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மணல் ஏற்றிச் சென்றவருக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மணற்காட்டுப் பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் ரக வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்றவருக்கு 5000 ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மேற்படி நபர், மணற்காட்டுப் பகுதியிலிருந்து சுன்னாகத்திற்கு மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருக்கும் போது, உடுப்பிட்டிப் பகுதியில் வைத்து வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் திங்கட்கிழமை (14) இரவு கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு இன்று (17) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் மேற்படி நபருக்குத் தண்டம் விதித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .