2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் ஐவர் கரையொதுங்கினர்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்திய மீனவர்கள் ஐந்து பேர் யாழ்., நயினாதீவுக் கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (17) காலை கரைசேர்ந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

படகுகள் எதுவும் இன்றிய நிலையில் நீந்திக் கரைசேர்ந்த மேற்படி மீனவர்களை கைது செய்த கடற்படையினர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி, மீனவர்கள் தாங்கள் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்ததாகவும், தங்கள் படகுகள் கடலில் மூழ்கியதாகத் தெரிவித்ததாகவும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மீனவர்களை நாளை வெள்ளிக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .