2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

ஜி.எவ்.ஏ.ரி.எம் (The Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria) திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட யாழ்.மண்டைதீவுப் பிரதேச வைத்தியசாலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வியாழக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி வைத்தியசாலை 1954ஆம் ஆண்டு அப்போதய இலங்கை பிரதமர் ஜோன் கொத்தல்லாவலவினால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 1989, 1990களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வைத்தியசாலை சேதமடைந்தது. மீண்டும் 1996ஆம் ஆண்டு வைத்தியசாலை மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டு வைத்தியசாலைச் செயற்பாடுகள் இடம்பெற்றன. 

எனினும் தொடர்ந்து வந்த காலங்களில் (2007 – 2008) இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தினை விட்டு மக்கள் இடம்பெயர்ந்தமையினால், வைத்தியசாலைச் செயற்பாடுகள் கைவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேற்படி வைத்தியசாலைக் கட்டிடத்தினை கடற்படையினர் தமது முகாமாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் மீண்டும் 2009ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதினைத் தொடர்ந்து, வைத்தியசாலையினை மீண்டும் செயற்படவைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதற்கமைய 2013 ஆம் ஆண்டு அங்கிருந்த கடற்படையினர் வெளியேற்றப்பட்;டு, வைத்தியசாலை புனரமைப்புப் பணிகள் ஜி.எவ்.ஏ.ரி.எம் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டு பௌதீக ரீதியிலான வளங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று (17) மேற்படி வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் போல் சிவராஜா, வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .