2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறை, முள்ளிவெளிச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை  இழந்த முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால்,  இதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று  வியாழக்கிழமை  மாலை அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை மேற்கைச் சேர்ந்த ஐயாத்துரை தங்கராசா (வயது  66), அருட்குமரன் கிருஷக் (வயது  31), அருட்குமரன் மனுஜா (வயது 30),  மீசாலை வடக்கைச் சேர்ந்த சதீஸன் சியாமினி (வயது  23) ஆகியோரே  படுகாயமடைந்தனர்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .