2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வடபகுதியில் கடமையாற்ற வைத்தியர்கள் முன்வரவேண்டும்: சுரேஷ்

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


வடபகுதி வைத்தியசாலைகளில் சேவை செய்ய வைத்தியர்கள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்று வியாழக்கிழமை (17) கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

'வட பகுதிக்கு வைத்தியர்களின் தேவை அதிகமாக காணப்படுகின்றது. வடபகுதி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவையாற்ற வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் வைத்திய படிப்புக்காக செலவினப் பணத்தில் வடபகுதி மக்களின் வரிப்பணமும் உள்ளடங்குகின்றது என்பதனையும் அவர்கள் மனதிற்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் இங்குள்ள வைத்தியர்கள் பலரும் மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்றி வந்துள்ளனர். அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை, இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை அழகாக காணப்படுகின்றது. இதேபோல எப்போதும் அழகாக இருக்கக் கூடியவாறு ஒழுங்கான முறையிலே பராமரிக்கப்பட வேண்டும்.

இந்த வைத்தியசாலை எதிர்காலத்தில் ஆடு, மாடு மற்றும் நாய்களின் தங்குமிடமாக மாறிவிடாதவாறு, இதனை இங்குள்ளவர்கள் ஒழுங்கான முறையில் பராமரித்து மக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .