2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலை வீதியினை புனரமைத்துத் தரும்படி கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ். மண்டைதீவு வைத்தியசாலை வீதியினை மிக விரைவில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க உதவுமாறும் வடமாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (17) கோரிக்கை முன்வைத்தார்.

யாழ். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.

 அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மண்டைதீவு - அல்லைப்பிட்டி வீதி மிக மோசமான முறையில் சேதமடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்த வீதி புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கின்றது. இந்த வீதியின் ஊடாகவே வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வரவேண்டிய நிலையில் உள்ளனர்.

அத்துடன் அல்லைப்பிட்டி மக்களும் இப்பிரதேச வைத்தியசாலைக்கே வரவேண்டும். இதுவரை காலமும் இந்த வீதி வேலணை பிரதேச சபைக்கு சொந்தமானதா அல்லது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதியா என சர்ச்சையில் இருந்தது.

தற்போது இந்த வீதியானது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு சொந்தமான வீதியாக காணப்படுகின்றது. எனவே இவ்வீதியினை மிக விரைவில் வீதி அபிவிருத்தி திணைகளத்தின் ஊடாக  புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் அவர்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .