2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மொழிப் பயன்பாடு தொடர்பிலான கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன், நா.நவரத்தினராசா


மும்மொழிக் கொள்கைகளைப் பயன்படுத்தாமை தொடர்பிலான பிணக்குகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்.கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் அ.ஆனந்தராஜா, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.

அதேவேளை மும்மொழிப் பயன்பாடு தொடர்பில் தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

இதன்போது ஆங்கிலம், சிங்களத்தில் கடிதங்கள் அனுப்படுகின்றமையால் ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் விளக்கியதுடன் பொலிஸ் நிலையங்களில் தொடர்பாடல் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .