2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் போராட முன்வரவேண்டும்: மாவை

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ். காரைநகரில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புக்கள் முன்வந்து போராட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி துஷ்பிரயோகப்படுதத்ப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் பிரதேச செயலக முன்றலில் நேற்று (18)  நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எவ்வாறு தமது படையை நடத்துகின்றது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு உதாரணமாகும். பாடசாலைக்கும் தெரியாமல், சிறுமியின் வீட்டாருக்கும் தெரியாமல் தொடர்ந்து 11 நாட்கள் அந்த சிறுமியை மிக தந்திரமாக ஏமாற்றி, கடற்படை சிப்பாய் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவந்துள்ளார்.

இந்த படைகள் எங்கள் மண்ணிலே இருந்து கொண்டு தமிழ் மக்களை அழிக்கவே தொடர்ந்து முயன்று வருகின்றது. இந்த படைகளை வெளியேற்றும் சக்தி எம்மிடம் இல்லை.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புக்கள் போராட முன்வரவேண்டும். பெண்கள் அமைப்பின் செயற்பாடுகள் போதுமான அளவாக காணப்படவில்லையெனவும் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புக்கள் முன்வந்து குரல் கொடுத்து போராட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .