2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நகரப் பகுதிக்கு டக்ளஸ் விஜயம்

Thipaan   / 2014 ஜூலை 20 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். நகரப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, இன்று(20) நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

யாழ். கஸ்தூரியார் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக உரிமையாளர்களை தவிர ஏனையவர்களின் வாகனங்களை தரிப்பதற்கு இடமளிக்க வேண்டாமென அமைச்சர், மாநகர முதல்வர் மற்றும் போக்குவரத்து பொலிஸாருக்கு விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது கஸ்தூரியார் வீதியிலுள்ள புதிய கட்டிட தொகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மேற்தளங்களில் அமையப் பெறவுள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டார்.

இதன்மூலம் நகரத்தில் ஏற்படக்கூடிய வீதி விபத்துக்களையும் போக்குவரத்து நெரிசல்களையும் சீர்படுத்த முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மணிக்கூட்டு கோபுர பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சிலைகளின் தரிப்பிடங்கள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவர் இரா. செல்வவடிவேல் உடனிருந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .