2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காணிகளைத் துப்பரவு செய்ய பொதுமக்களுக்குத் தடை

Thipaan   / 2014 ஜூலை 20 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள 127 ஏக்கர் காணிகளில், உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியிலுள்ள காணிகளைத் துப்பரவு செய்வதற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) பொதுமக்கள் முயன்ற போதும், அதனை காங்கேசன்துறைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக வலி. வடக்குப் பிரதேச செயலர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

காணிகளைத் துப்பரவு செய்யச் சென்றால் கடற்படையினர் பொதுமக்களைத் தாக்கக்கூடும் எனக்கூறியே பொலிஸார் இந்த காணி துப்பரவு செய்யும் நடவடிக்கையைத் தடை செய்துள்ளனர்.

அத்துடன், பொதுமக்கள் தங்கள் காணிகள் என்பதை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் உறுதிப்படுத்திய பின்னர் காணிகளைத் துப்பரவு செய்யலாம் எனவும் பொலிஸார் தெரிவித்ததாகவும் இதனையடுத்து, பொதுமக்கள் காணிகளைத் துப்பரவு செய்யாமல் திரும்பிச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்கும் பொருட்டு, இரண்டு முறை காணி அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகளால்; மேற்கொள்ள முயன்றபோதும், பொதுமக்களின் போராட்டத்தினால் அது கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .