2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடாது: யோகேஸ்வரி

Thipaan   / 2014 ஜூலை 20 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா, பொ.சோபிகா

"வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. அரசினால் முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்தி வேலைகளுக்கு சிலர் முட்டுக்கட்டையாக நின்று நந்தி போல செயற்பட்டு வருகிறார்கள்" என யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்ற வாடகை முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான மரண சகாய நிதி உதவித்திட்ட அறிமுகவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

"பெண்கள் முச்சக்கரவண்டி சாரதிகளாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி வருகின்றமை சமூகத்தில் நிகழ்ந்த பாரிய மாற்றம்.  இவ்வாறான செயற்பாடுகளை சமூக ரீதியாக அங்கீகரித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களுக்கு செழுமையான வாழ்வாதரத்தை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மீண்டும், இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு நாம் செல்லக்கூடாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .