2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இராணுவ அதிகாரிகளுக்கான ஊடக செயலமர்வு

George   / 2014 ஜூலை 20 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தினால் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைதொடர்புகள் மற்றும் ஊடகங்கள் பற்றிய ஆறு நாள் செயலமர்வு ஜூலை மாதம் 19ஆம் திகதி நிறைவு பெற்றது.

இந்த ஊடக செயலமர்வில் விரிவுரைகளை நடத்துவதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, முன்னால் துணை வேந்தர் பேராசிரியர் திரு பாலசுப்பிரமணியம் பிள்ளை, யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை விரிவுரையாளர் அருட்தந்தை ரூபன் மரியம்பிள்ளை, புத்திஜீவிகள் உட்பட கொழும்பிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

இதன் போது, செயலமர்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .