2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இருவேறு விபத்துகளில் நால்வர் படுகாயம்

George   / 2014 ஜூலை 20 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், பொ.சோபிகா

யாழ். இலுப்பையடி சந்தியில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி பாற்பண்ணையடியினைச் சேர்ந்த எஸ்.சுகந்தி (வயது 45) என்பவரே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளார்.

பலாலி வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வான் வீதியினைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொக்குவில் சந்தியில் மோட்டார் சைக்கிளிலும் துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவாலையினைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ்.நரேஸ், 25 வயதுடைய ஏ.லிப்ஸன், மற்றும் கொக்குவிலினைச் சேர்ந்த 66 வயதுடைய ரி.மகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .